உலகம்
Typography

அண்மையில் மெக்ஸிக்கோவில் நடந்து முடிந்த அதிபட் தேர்தலில் இடதுசாரிக் கட்சியின் வேட்பாளரான 64 வயதாகும் ஆண்டரஸ் மானுவேல் வெற்றி பெற்றுள்ளார்.

மெக்ஸிக்கோவில் ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியில் அதிபர் தேர்தல் இடம்பெற்றது. இதில் இடதுசாரி தேசிய மறுமலர்ச்சி கட்சி 53% வீத வாக்குகளை சுவீகரித்து பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியீட்டியது.

ஆண்டரஸுக்கு சவாலாகக் காணப்பட்ட ரெகார்டோ அனயா 22% வீத வாக்குகளையும் ஆளும் புரட்சிகரக் கட்சி 16% வீத வாக்குகளையும் சுவீகரித்தன. வெற்றியடைந்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆண்டரஸ் தான் நேர்மையாக மக்களின் மதிப்பைப் பெறும் விதத்தில் நிச்சயம் ஆட்சி செய்வேன் என்றும் எவரையும் ஏமாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார். ஆண்டரஸுக்கு உலகத் தலைவர்கள் பலரிடம் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே மெக்ஸிக்கோவுடன் சட்ட விரோத குடியேற்றம், எல்லைப் பிரச்சினை குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்தது போன்ற பல சர்ச்சைகள் அமெரிக்காவுக்கு இருந்து வருகின்றது. இந்நிலையில் ஆண்டரஸின் வெற்றிக்கு டுவிட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆண்டரஸுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததுடன் இரு நாடும் தத்தமது நலன்களைப் பெற சேர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS