உலகம்
Typography

தென்னாப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனுக்கு அண்மையில் குடிநீருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது நீங்கள் அறிந்ததே.

அந்த வகையில் வருங்காலத்தில் குடிநீருக்கு ஏற்படக் கூடிய கட்டுப்பாட்டுக்களைத் தவிர்க்க அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறைகளை அகழ்ந்தெடுக்கும் திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் ஆன UAE உள்ளது.

இது தொடர்பான அதியுயர் தொழிநுட்பத்தை அலசி வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ஆலோசனைப் பீடம் கூறுகையில் இத்திட்டம் மிகவும் செலவு குறைந்தது என்றும் பனிப்பாறைகளை இடம்மாற்றும் போதே அவை பூச்சிய வெப்பநிலைக்கு அதாவது தூய்மையான தண்ணீராக மாறி விடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு உத்தியோகபூர்வ வலைத் தளமே அரசினால் நிறுவப் பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தி கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகை அறிவிப்பு விடுத்துள்ளது.

முதன் முறை 2017 மே மாதம் அறிவிக்கப் பட்ட இந்த பனிப்பாறை குடி நீர்த் திட்டம் தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் 2020 ஆமாண்டளவுல் இது நிறைவு பெற்று விடும் என்றும் தேசிய ஆலோசனைப் பீடம் தெரிவித்துள்ளது. சராசரியான ஒரு பனிப் பாறை கிட்டத்தட்ட 20 பில்லியன் கலொன்ஸ் தூய தண்ணீரைக் கொண்டிருக்குமாம். குடி நீர்ப் பாவனைக்குத் தேவையானது போக எஞ்சிய உருகும் பனிப்பாறைகள் அரேபியன் கடலுக்குள் செலுத்தப் படும் என்றும் இதன் மூலம் அரேபியன் கடலின் உப்புத் தன்மை குறைந்து அங்கு நீர் வாழ் தாவர விலங்கு உயிரினங்களின் வாழ்க்கை செழித்து புவியியல் சமநிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பனிப்பாறைத் திட்டத்துக்கான செலவும் $50 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்