உலகம்
Typography

அண்மையில் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது வடகொரியா கொரியத் தீபகற்பத்தில் இருந்து தனது அனைத்து அணுவாயுதங்களையும் பகிஷ்கரிப்பு செய்வதாக வாக்களித்திருந்தது.

ஆனால் இந்த உறுதியை மீறித் தற்போது வடகொரியா மீண்டும் ரகசியமாகத் தனது அணுவாயுதத் திட்டத்தைத் தொடர்வதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்களின் தகவல் படி வடகொரியா தனது அணுசக்தி செறிவூட்டும் தளங்களை மேம்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. முக்கியமாக யாங்பியானில் உள்ள தனது அதிகாரப் பூர்வ அணுசக்தி செறிவூட்டும் தளத்தை வடகொரியா மேம்படுத்தி வருவதாகவும் இது தவிர இன்னும் இரு ரகசியத் தளங்களிலும் இப்பணியை செய்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் 38 செயற்கைக் கோள் புகைப் படங்கள் மூலம் இத்தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை வடகொரியா தனது அணுவாயுத ஒழிப்பை நிறைவேற்றிய பின்னரே அதன் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப் படும் என அமெரிக்கா ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தமையால் இவ்விடயத்தில் வடகொரியாவுக்கு கால அவகாச தேவைப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்