உலகம்
Typography

மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என தனது நட்பு நாடுகளுக்கு அழுத்தம் தெரிவித்து வரும் அமெரிக்காவின் செய்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் றௌஹானி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பைக் கொண்டு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் ஈரானிய நாட்டவர்கள் மத்தியில் உரையாற்றும் போது இத்தகவலை றௌஹானி தெரிவித்தார்.
மேலும் தமது எண்ணெய்யினை ஏற்றுமதி செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கின்றதா என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன்பு ஈரான் இவ்வாறு எச்சரிக்கப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தின் போது றௌஹானி உலகின் 3 ஆவது பிராந்திய முக்கியத்துவம் மிக்க ஹோர்முஸ் என்ற எண்ணெய் நீரிணையை மூடி விடப் போவதாக பதில் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

உலக பெற்றோலியக் கூட்டுத் தாபனமான OPEC இல் அங்கம் வகிக்கும் ஈரான் ஒரு நாளைக்கு 2 மில்லியன் பரெல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் உலகின் 2 ஆவது பெரிய கணிய எண்ணெய் ஏற்றுமதியாளர் என்பதும் முக்கியமானது ஆகும். இதேவேளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் அர்த்தமற்ற வரி விதிப்பு முறைகளால் விரைவில் அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப் படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்