உலகம்
Typography

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல மில்லியன் டாலர்கள் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் கைதான முன்னா மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மேலும் அவர் மீதான மேலதிக விசாரணை அடுத்த வருடம் பெப்ரவரியில் ஒரு குறிப்பிட்ட திகதியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் நஜீப் பேசிய போது தன் மீதான குற்றங்களை நிராகரித்ததுடன் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை நிச்சயம் நீதிமன்றத்திலேயே தான் துடைப்பேன் என்றும் கூறினார். முன்னதாக புலனாய்வுத் துறையினர் நஜீப்பின் வீட்டில் சோதனையிட்ட போது 270 மில்லியன் டாலர் பெறுமதியுடைய ஆடம்பரப் பொருட்களையும் மேலும் அவரின் மனைவிக்குச் சொந்தமான 12 000 ஆபரணங்களையும் கைப்பற்றினர். மேலும் நிதி மோசடி தொடர்பில் நஜீப் இன் வளர்ப்பு மகனிடமும் Wolf of wall street என்ற ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரிடமும் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

முக்கியமாக 2009 ஆமாண்டு தொலைநோக்கு முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோலாலம்பூரை நிதி முனையமாக மாற்றவென 1MDB என்ற முதலீட்டு நிதியத்தை நஜீப் ஆரம்பித்திருந்தார். ஆனால் இந்நிறுவனத்தை தனது ஊழல் நடவடிக்கைக்காக பெருமளவில் நஜீப் பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு சுமார் 11 பில்லியன் டாலர் தொகையை வங்கிகளுக்கும் கடன் பத்திரதாரர்களுக்கும் கொடுக்கத் தவறிய இந்த நிதியம் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரிக்கவே இது தொடர்பில் புலனாய்வு நடவடிக்கை முடுக்கி விடப் பட்டது

இதன் போது இந்த 1MBD நிதியத்தில் இருந்து இலட்சக் கணக்கான டாலர்கள் நஜீப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குச் சென்றதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால் இக்குற்றச்சாட்டை நஜீப் தொடர்ந்து மறுத்து வருகின்றார். மேலும் மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தோற்று பதவியில் இருந்து அகற்றப் பட்ட நஜீப்புக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரதமராக இருந்த போது சொந்த நாட்டில் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து அதிகாரிகளால் விடுவிக்கப் பட்டிருந்த போதும் பல நாடுகளில் இவர் மீது விசாரணை நடத்தப் பட்டு வந்தது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்