உலகம்
Typography

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் என்ற நகரத்தில் கணிசமான அளவு சீக்கியர்களும் இந்துக்களும் சிறுபான்மையினத்தவராக வசித்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக இவர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன் இவர்கள் ஒன்று இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் அல்லது இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற அழுத்தமும் பிரயோகிக்கப் பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

1990 போருக்கு முன்பு கிட்டத்த 250 000 சீக்கியர்களும் இந்துக்களும் வசித்து வந்த ஆப்கானில் 10 ஆண்டுகளுக்கு முன் இத்தொகை 3000 ஆகக் குறைந்து தற்போது வெறும் 300 குடும்பங்களே இருப்பதாக கணிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு தலைநகர் காபூலிலும் ஜலாலாபாத்தில் மட்டுமே இரு வழிபாட்டுத் தளங்கள் உள்ளன. இறுதியாக ஜலாலாபாத்தில் ஒரு வைத்திய சாலையைத் திறந்து வைக்க அதிபர் அஸ்ரப் கனி ஜூலை முதலாம் திகதி சென்றிருந்த போது அவரைச் சந்திக்க கவர்னர் மாளிகைக்கு வந்த சிறுபான்மை இனப் பிரதிநிதிகளின் வாகனங்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்ட போது 19 பேர் பலியாகி இருந்தனர்.

இதில் அநேகமானவர்கள் சீக்கியர்களும் இந்துக்களும் ஆவர். மேலும் சீக்கிய மதக் குழுத் தலைவர் அவதார் சிங் கல்சாவும் இதில் பலியானதுடன் 20 பேர் வரை படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பின்னதாக ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்தும் பல சீக்கியர்கள் தைரியமாக நாம் ஆப்கான் மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்று தெரிவித்துள்ள போதும் சிலர் இந்தியத் தூதரகத்திடம் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS