உலகம்
Typography

வடக்கு தாய்லாந்தில் உள்ள் ஒரு குகைக்குள் கடந்த 11 நாட்களாக சிக்கிக் கொண்ட 12 பள்ளிச் சிறுவர்கள் அடங்கிய விளையாட்டு அணி ஒன்றினையும் அவர்களின் 25 வயது மதிக்கத் தக்க பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதற்காக புதன்கிழமையும் மீட்புக் குழுவினர் நீந்துதல் மற்றும் டைவிங் ஆகிய முறைகளில் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்த மாணவர் குழுவுக்குத் தேவையான மருந்துகள், உணவு என்பவற்றை வழங்கக் கூடியதாக இருந்த போதிலும் அவர்களைப் பத்திரமாக மீட்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என அரசு அறிவித்துள்ளது. அதாவது இக்குகைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கும் மீட்புப் படையினருக்கும் இடையே தண்ணீரின் அழுத்தம் அதிகமாகவும் சிறுவர்களை மீட்கும் பாதை மிகக் குறுகியதாகவும் இருப்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளதாகவும் இதற்கு அதிகளவு நிபுணர்களின் உதவி தேவை எனவும் தாய்லாந்து துணைப் பிரதமர் ப்ராவித் வொங்சுவான் நிருபர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் தற்போது தமது மீட்புக் குழுவினர் உள்ளே அகப்பட்டுக் கொண்ட சிறுவர்களுக்கு எவ்வாறு நீந்துவது மற்றும் டைவிங் செய்வது என்பதைக் கற்றுக் கொடுத்து வருவதாகவும் தண்ணீரின் அளவு குறைந்து பலவீனமாகும் தருணத்தில் உடனே அவர்களை மீட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் தாய்லாந்து நேவி அமைப்பான SEALS வெளியிட்ட புகைப் படங்களில் அகப்பட்டுக் கொண்டுள்ள குழுவை மீட்கும் பட்சத்தில் தண்ணீரை மிக வேகமாக பம்ப் செய்வதன் மூலம் அவர்களை உடனடியாக வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகள் தெரிய வந்துள்ளது.

செவ்வாய் மாலை வரை கிட்டத்தட்ட 120 மில்லியன் லீட்டர் தண்ணீர் பம்ப் செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மணித்தியாலமும் தாற்போது 1.6 மில்லியன் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருவதாகவு தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த குகையின் வாசலில் இருந்து 4 Km தொலைவில் அகப்பட்டுள்ள சிறுவர்களை மீட்க டைவர்களுக்கு 3 மணித்தியாலம் தேவை என்று கணிக்கப் பட்டுள்ளது. உள்ளே அகப் பட்டுக் கொண்டுள்ள மாணவர்கள் நல்ல மன நிலையுடன் ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பதும் அவர்கள் குறித்து எடுக்கப் பட்ட வீடியோ ஒன்றில் தெரிய வந்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்