உலகம்
Typography

கடந்த திங்கட்கிழமை முதல் கைலாச மானஸ்வரூவர் யாத்திரைக்காகச் சென்று ஹில்சா மற்றும் சிமிகொட் ஆகிய பகுதிகளில் மோசமான காலநிலை காரணமாகச் சிக்கிக் கொண்ட சுமார் 1500 இற்கும் அதிகமான யாத்திரீகர்களில் கிட்டத்தட்ட 1200 பேர் சிமிகொட் பகுதியில் இருந்து பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்கப் பட்டுள்ளதாக காத்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

திபேத் வழியாக யாத்திரை முடித்துத் திரும்பி வரும் போது ஹில்சாவில் மாட்டிக் கொண்டுள்ள எஞ்சிய யாத்திரீகர்களையும் மீட்கும் பணி விரைவில் மேற்கொள்ளப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை சிமிகொட்டில் மீட்கப் பட்ட யாத்திரீகர்கள் இந்திய எல்லையில் உள்ள நேபல்குன்ஜ் மற்றும் சுர்க்கெட் ஆகிய நகரங்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளும் மருத்துவ வசதியும் அளிக்கப் பட்டு வருகின்றது.

இதேவேளை ஹில்சாவில் மாட்டிக் கொண்டுள்ள கிட்டத்தட்ட 675 பேரை வான் வழியாக மீட்கும் பணி குறித்து இந்தியத் தூதரகம் துரிதமாகச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே மீட்புப் பணியில் 74 வர்த்தக விமானங்களும் MI-16 ரக நேபாளத்தின் இராணுவ ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப் பட்டிருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்