உலகம்
Typography

2016 ஆம் ஆண்டு துருக்கி அரசால் முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப் படும் மேலும் 18 500 அரச அதிகாரிகளை துருக்கி அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் அமெரிக்காவின் நாடு கடந்து வாழும் மதகுரு பெதுல்லா குலெனின் ஆதரவாளர்கள் என்ற குற்றத்தின் பேரில் இராணுவம், காவற் துறை மற்றும் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 150 000 அரச ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தான் தற்போது இதே ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 8998 போலிசாரும், 6152 இராணுவ அதிகாரிகளும் உட்பட 18 500 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக துருக்கி அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 2 ஆவது முறையாகத் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளா அதிபர் எர்டோகன். சமீபத்தில் துருக்கியில் திருத்தப் பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அதிபர் எர்டோகனுக்கு முன்பிருந்ததை விட அதிகப் படியான அதிகாரங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்