உலகம்
Typography

பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற 9 மாதங்கள் கெடுவே உள்ள நிலையில் பிரிட்டன் வெளிநாட்டு விவகார அமைச்சர் போரிஸ் ஜான்சன் திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது பிரிட்டன் அரசுக்கு அரசியல் ரீதியிலான சிக்கல்களை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக ஒழுங்கைப் பேணுவதாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே அறிவித்து இதற்கு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தும் கூட அரசின் பிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸும் போரிஸ் ஜான்சனும் ஆகிய இருவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். விரைவில் தெரேசா மே நாடாளுமன்றத்தில் தனது புதிய பிரெக்ஸிட் திட்டம் குறித்து விளக்கவுள்ளார். இவரின் திட்டம் ஏற்கனவே பல கன்சர்வேட்டிவ் எம்பிக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 19 2019 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் போதிலும் இந்த பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பின்பு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் எவ்வாறு வர்த்தகம் செய்து கொள்வது என்பது தொடர்பில் இரு தரப்பும் இன்னும் இணக்கப் பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் பிரெக்ஸிட்டின் முக்கிய ஆதரவாளராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியது பிரதமர் தெரெசா மே இற்கு மிகவும் நெருக்கடியான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது என பிபிசி அரசியல் ஆசிரியர் லாரா குயின்ஸ்பர்க் என்பவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்