உலகம்
Typography

ஜப்பானில் வரலாறு காணாத கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 100 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் மரத்தால் ஆனவை என்பதால் அவை அதிகம் சேதாரத்துக்கு உள்ளாகி உள்ளன. மேலும் இது போன்ற ஒரு மழை வெள்ளத்தை இதற்கு முன்பு தாம் பார்த்ததே இல்லை என பல பொது மக்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக உலக அளவில் பேரிடர் முகாமைத்துவத்தை மிகச் சிறப்பாக பேணி வரும் ஜப்பான் அங்கு ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றை தைரியமாக எதிர் கொள்ளக் கூடிய கட்டமைப்பைக் கொண்ட நாடாகக் கருதப் படுகின்றது. இருந்த போதும் இம்முறை பருவ மழைக்கு ஏன் இந்தளவு உயிரிழப்புக்களை அதாவது 100 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பது வியப்பாகவே உள்ளது. மேலும் மழை வெள்ளம் மற்றும் மண் சரிவால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 5 மில்லியன் மக்கள் வெளியேற அங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை துருக்கியில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியும் 80 பேர் வரை படுகாயம் அடைந்தும் உள்ளனர். பிகுலே என்ற பகுதியில் இருந்து இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்த இந்த ரயில் மோசமான மழை மற்றும் மண்சரிவு காரணமாக விபத்தில் சிக்கியுள்ளது. மொத்தம் 360 பேருடன் சென்ற இந்த ரயில் விபத்துக்குள்ளானதால் காயமடைந்த பலர் தமது உடலுறுப்புக்களை இழந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப் படுகின்றது.

தற்போது நூற்றுக்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வண்டிகளுடன் மீட்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்