உலகம்
Typography

அண்மையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த $50 பில்லியன் டாலர் பெறுமதியான பொருளாதார ஒப்பந்த அடிப்படையில் இன்று திங்கட்கிழமை பாகிஸ்தானுக்காக இரு முக்கிய செய்மதிகளை விண்ணில் செலுத்தியுள்ளது சீனா.

முதன்முறையாக ஆகஸ்ட் 2011 இல் பாகிஸ்தானுக்கான தகவல் தொடர்பு சேட்டலைட்டான PAKSAT-1R இனை சீனா விண்ணில் செலுத்தியிருந்தது.

இதையடுத்து தற்போது விண்ணுக்குச் செலுத்தப் பட்ட இரு செய்மதிகள் மூலம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விண்வெளி கூட்டுறவு வலிமையடைந்துள்ளது. திங்கட்கிழமை சீன நேரப் படி காலை 11:56 மணிக்கு லோங் மார்ச் 2C ராக்கெட்டு மூலம் வடமேற்கு சீனாவிலுள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து பாகிஸ்தானுக்காக PRSS-1 மற்றும் PakTES-1A ஆகிய இரு செய்மதிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டன.

CAST எனப்படும் விண்வெளி தொழிநுட்பத்துக்கான சீனாவின் அகெடமியினால் ஒரு வெளிநாட்டு கொள்வனவாளருக்காகத் தயாரிக்கப் பட்ட 17 ஆவது சேட்டலைட் இந்த ஆப்டிகல் ரிமோட் சென்சிங் வசதி கொண்ட PRSS-1 ஆகும். மேலும் Suparco என்ற நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட விஞ்ஞான ஆய்வு சேட்டிலைட் PakTESS-1A ஆகும். இவ்விரு செய்மதிகளும் எந்த வித சிக்கலும் இன்றி புவி ஒழுக்கில் முறையாக நிறுவப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 7 வருட ஆயுள் காலம் கொண்ட PRSS-1 சேட்டலைட் சர்வே, இயற்கை அனர்த்தங்களைக் கண்காணித்தல், விவசாய நிலங்களைக் கண்டறிதல், நகரக் கட்டமைப்பு மற்றும் சீனாவின் ஒரே பட்டைக் கொள்கையின் (BRI-Belt Road Initiative) கீழ் CPEC எனப்படும் சீனா பாகிஸ்தானுக்கு இடையேயான பொருளாதாரக் கூட்டுறவுக்கான தகவல் தொடர்பு போன்ற பயன்களுக்காக உபயோகிக்கப் படவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS