உலகம்
Typography

இவ்வருடம் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த வருடாந்த இராணுவப் பயிற்சியை தற்காலிகமாக இடை நிறுத்தியிருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

இத்தகவலை ஏனைய அமைச்சர்களுடனான சந்திப்பின் பின்பு தென்கொரிய உள்துறை அமைச்சர் பூ குயும் வெளியிட்டார்.

அதன் போது அவர் அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட்டில் தென்கொரியா மேற்கொண்ட இராணுவப் பயிற்சியை இவ்வருடம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். இதற்கு மாறி வரும் பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளே காரணம் என்று தெரிவித்தார். ஏற்கனவே ஜூன் மாதம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபருடன் அமெரிக்க அதிபர் கலந்து கொண்ட உச்சி மாநாட்டில் கொரியத் தீபகற்பத்தில் பூரண அணுவாயுதப் பகிஷ்கரிப்புக்குப் பதிலாக தென்கொரியாவுடன் வருடாந்த இராணுவப் பயிற்சியை இடை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு சர்வதேசத்தின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுவாயுதப் பரிசோதனைகளை நிகழ்த்தி வந்ததால் பிராந்தியப் பாதுகாப்பு நிமித்தம் அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் கொரியக் கடலில் ஈடுபட்டன. இதனால் கொரியத் தீபகற்பத்தில் எந்நேரமும் போர் ஏற்படலாம் என்று பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்