உலகம்
Typography

உலகின் பிரபல சமூக வலைத் தளமான டுவிட்டரில் அதிகம் பின்பற்றப் படும் உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலிடத்தில் உள்ளார் என ஒரு ஆய்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

உலகக் கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவரான பாப்பரசரை விட டிரம்ப் டுவிட்டரில் 4.5 மில்லியன் அதிகம் பின்பற்றுபவர்களுடன் கிட்டத்தட்ட 52 மில்லியனுக்கும் அதிகமான பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளார்.

இந்த எண்ணிக்கை டிரம்ப் பதவியேற்றதில் இருந்ததை விட இரண்டு மடங்குக்கும் அதிகம் எனவும் இந்த ஆய்வு கூறுகின்றது. BCW என்ற தகவல் தொடர்பு ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட 42 மில்லியன் பின்பற்றுபவர்களுடன் 3 ஆவது இடத்திலுள்ளார். இதில் வெறுமனே பின்பற்றுபவர்கள் மாத்திரமன்றி லைக்குகள் மற்றும் மீள் டுவீட் போன்ற செய்கைகளிலும் டிரம்பின் டுவிட்டர் கணக்கே முன்னிலையில் உள்ளது.

கடந்த 12 மாதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பின்பற்றுபவர்களுடன் கிட்டத்தட்ட 264.5 மில்லியன் தொடர்புகள் மூலம் மோடியை விட 5 மடங்கு அதிகமாகவும் பாப்பரசரை விட 12 மடங்கு அதிகமாகவும் செல்வாக்கு பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 951 பிரசித்தமான டுவிட்டர் கணக்குகளில் BCW மேற்கொண்ட இந்த ஆய்வில் 13% வீதமானவை அதாவது 125 கணக்குகள் மிகவும் செல்வாக்கு உள்ளவையாகவும் 33 கணக்குகள் ஆக்டிவ் இல்லாமலும் 9 கணக்குகள் பாதுகாக்கப் பட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்