உலகம்
Typography

தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள சிறிய தீவு  நாடான வனௌட்டு இலிருந்து 535 Km தொலைவில் 7.2 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீளப் பெறப் பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவோ உடனடித் தகவல் இல்லை. கடலுக்கு அடியில் சுமார் 10 Km ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி அலைகளை இந்த நிலநடுக்கம் ஏற்படுத்தவில்லை என ஹாவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 7.6 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கம் பின்னர் 7.2 ரிக்டர் என அறிவிக்கப் பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து 5.4 ரிக்டர் அளவு கொண்ட ஒரு தொடர் அதிர்வு பதிவானதாக USGS தெரிவித்துள்ளது.

ஃபிஜி போன்ற அண்டைய நாடுகளின் கடற்கரைகளில் வழமையை விட மிக உயரமான அலைகள் எழுந்ததாகக் கூறப்படுகின்றது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த வனௌட்டு இல் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS