உலகம்

அண்மையில் 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் வலிமையான 10 பொருளாதார வல்லரச நாடுகளின் பட்டியலை உலக வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP இன் அடிப்படையில் வெளியிட்டிருந்தது.

இதில் பிரான்ஸுக்கு முன்பு 6 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. 2017 இல் இந்தியாவின் GDP $2.597 டிரில்லியனாகவும், பிரான்ஸின் GDP $2.582 டிரில்லியனாகவும் இருந்துள்ளது.

10 ஆவது இடத்தில் $1.653 டிரில்லியன் GDP உடன் கனடாவுள்ளது. 9 ஆவது இடத்தில் $1.934 டிரில்லியன் GDP உடன் இத்தாலியும் முறையே 8 ஆவது இடத்தில் பிரேசிலும், 7 ஆவது இடத்தில் பிரான்ஸும், 6 ஆவது இடத்தில் இந்தியாவும், 5 ஆவது இடத்தில் பிரிட்டனும், 4 ஆவது இடத்தில் ஜேர்மனியும், $4.872 டிரில்லியன் GDP உடன் 3 ஆவது இடத்தில் ஜப்பானும், $12.237 டிரில்லியன் GDP உடன் 2 ஆவது இடத்தில் சீனாவும், $19.390 டிரில்லியன் GDP உடன் முதலிடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ள போதும் அது அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வலிமை அதாவது GDP இன் அரைப் பங்குக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் அழுத்தத்தின் மத்தியிலும் இந்தியா ரூ 39 000 கோடி பெறுமதியான S-400 ரக வான் வழி ஏவுகணைத் தடுப்பு 5 பொறிமுறை ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் வியாபாரத்தைத் தடுக்கும் நோக்கில் CAATSA என்ற தடை முறையை அமெரிக்கா செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.