உலகம்
Typography

தாய்லாந்தில் சியாரங்க் மாகாணத்திலுள்ள 10 Km நீளமுள்ள குகையில் கடந்த மாதம் சிக்கிக் கொண்டு 2 வாரங்களாக உள்ளே தவித்த 12 உதைப் பந்தாட்ட பயிற்சி சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் அனுபவித்த உணர்வுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்ட மீட்புப் பணி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று தயாராகவுள்ளது.

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் மிச்சேல் ஸ்காட் இன் தயாரிப்பில் திகில் படமாக உருவாகவுள்ள இத்திரைப் படத்தில் முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மறுபுறம் இச்சிறுவர்கள் அகப்பட்டுக் கொண்ட சியாங் ராய் மாகாணத்தின் மே சாய் நகரத்தில் மியான்மார் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தாம் லுவாங் என்ற குகை அதிகாரிகளால் இந்த அசம்பாவிதத்துக்குப் பின்னர் சீல் வைக்கப் பட்டுள்ளது. இருந்த போதும் இக்குகை இனிமேல் சுற்றுலாப் பயணிகளுக்கான அருங்காட்சியகமாக மாற்றப் படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பில் மீட்புக் குழுத் தலைவரும் முன்னால் மாகாண ஆளுனருமான நரோங்சக் சோட்டாநாகோர்ன் என்பவர் கருத்துத் தெரிவித்த போது இக்குகைப் பகுதி முழுமையாக அருங்காட்சியகமாக மாற்றப் படவுள்ளது என்றும் இதில் எவ்வாறு சிறுவர்களை மீட்கும் பணி இடம்பெற்றது என்பது குறித்த பதிவுகள் இடம்பெறும் என்றும் கூறினார். மேலும் இந்த தாம் லுவாங் குகை நிச்சயம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகப் புகழ் பெறும் என்றும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இக்குகைக்குள் இருந்து மீட்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிறுவர்கள் அனைவரும் வியாழக்கிழமையுடன் வீடு திரும்புவர் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்