உலகம்
Typography

ஆகஸ்ட்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வேற்றுமையை மறந்து இணைந்து பங்கேற்கின்றன.

எதிர்வரும் மாதம் SCO எனப்படும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனுசரனையில் ரஷ்யாவில் மிகப்பெரிய அளவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி நடைபெறுகின்றது.

செல்யாபின்ஸ்க் என்ற நகரில் நடைபெறும் பயிற்சியில் இந்திய விமானப் படையின் 200 வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு அவர்களை வெற்றி கொள்வதே இந்த சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் பங்கேற்கும் பயிற்சியின் நோக்கம் என ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பங்கேற்பது என்பது இவை இரண்டுக்கும் இடையே உள்ள பிராந்திய வேறுபாடுகளைத் தளர்த்தும் எனத் தாம் நம்புவதாக சீன அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்