உலகம்
Typography

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு வேறு இடங்களில் ISIS தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் இடம்பெற்ற மோசமான தீவிரவாதத் தாக்குதலினால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள நிலையில் இன்று ஞாயிறு பாகிஸ்தானில் துக்க தினம் அனுட்டிக்கப் படுகின்றது.

எதிர்வரும் ஜுலை 25 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பாளர்களை பிரச்சார சமயத்தில் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் தாக்குதல் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நடத்தப் பட்ட போது 5 பேர் உயிரிழந்தனர். சில மணி நேரங்களுக்குள் அடுத்த குண்டுத் தாக்குதல் பலுசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்துங் பகுதியில் பலுசிஸ்தான் அவாமி கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை இலக்கு வைத்து நடத்தப் பட்டது. இதில் 128 பேர் பலியானார்கள்.

120 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து வைத்திய சாலையில் உள்ளனர். இதிலும் பலர் அங்கங்களை இழந்தும் உயிருக்குப் போராடியும் வருவதாகத் தெரிய வருகின்றது. இக்குண்டு வெடிப்பில் உயிரிழந்த அவாமி கட்சியின் தேர்தல் வேட்பாளர் சிராஹ் ரைசனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மூசா அரங்கில் வைக்கப் பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் உட்பட பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுட்டிக்கப் படும் என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் நாசிருல் முல்க் அறிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS