உலகம்
Typography

இன்று புதன்கிழமை தென்னாப்பிரிக்க தேசத் தந்தை அமரர் நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது ஆண்டு பிறந்த தினமாகும்.

இதனை முன்னிட்டு ஜொஹன்னஸ்பேர்க் இல் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கு பற்றி அமெரிக்க முன்னால் முதல் கருப்பின ஜனாதிபதி பாரக் ஒபாமா சிறப்புரை ஆற்றினார்.

இதன் போது ஒபாமா தான் ஆபிரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் காட்டிய வழியில் நம்பிக்கை உள்ளவர் எனத் தொடங்கி உருக்கமாகப் பேசினார். கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடி பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு விடுதலையான போது உலகமெங்கும் வாழும் மக்களின் இதயங்களில் நம்பிக்கை பிறந்ததாக ஒபாமா குறிப்பிட்டார். தென்னாப்பிரிக்க ஒடுக்கப் பட்ட மக்களுக்கு மண்டேலாவின் தியாகம், ஈடு இணையில்லா தலைமைப் பண்பு மற்றும் நல்லொழுக்கம் என்பவையே உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்றும் ஒபாமா தெரிவித்தார்

மண்டேலாவின் வழி வந்த தென்னாப்பிரிக்காவின் தற்போதைய அதிபர் சிரில் ராமபோஸா அவரின் 100 ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி தனது ஊதியத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு தானமாக அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுதவிர மண்டேலாவின் சொந்த ஊரான கிழக்கு கேப் மாகாணத்தின் வெப்ஸா நகரில் மருத்துவ மனை திறக்கப் பட்டு, செடிகளை நடுவது மற்றும் முதியோர்களுக்கு போர்வை வழங்குதல் போன்ற நலத்திட்டப் பணிகளை அதிபர் சிரில் ராபோஸா மேற்கொண்டார்.

மேலும் மண்டேலாவின் துணைவியாரான மைக்கேல் கிராசா அவரின் புகழைப் பரப்பும் வகையில் சிறியளவிலான நடைப் பயணம் ஒன்றை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்