உலகம்
Typography

ஏற்கனவே சர்வதேசத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதித் தீர்வை வரியை அதிகரித்து உலக அளவில் வணிக யுத்தம் தீவிரமடையச் செய்துள்ள நிலையில் இதற்குத் தெளிவான எதிர்வினையாக ஐரோப்பிய யூனியனுடன் ஜப்பான் திறந்த முக்கிய பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப் பட்ட இந்த ஒப்பந்தத்தை அடுத்து உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளில் இது அமெரிக்காவின் தற்காப்புக் கோட்பாட்டுக்கு protectionism)எதிரான தெளிவான செய்தி என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டோக்கியோவில் கைச்சாத்திடப் பட்ட இந்த வர்த்தக ஒப்பந்தமே இரு நாட்டுக்கும் இடையேயான மிகப் பெரிய வணிக ஒப்பந்தமாக ஐரோப்பிய யூனியனால் பார்க்கப் படுகின்றது. இது மட்டுமல்லாது இந்த வணிக ஒப்பந்தம் இரு தேசங்களுக்கும் இடையே மிகப் பெரிய திறந்த (இலவச) வர்த்தக வெளியை உருவாக்கியுள்ளது. அதாவது ஜப்பானில் இருந்து வரும் கார் முதல் பிரான்ஸில் இருந்து ஜப்பானுக்குச் செல்லும் சீஸ் வரை அனைத்துக்கும் எந்தவொரு தீர்வை வரியும் இனிமேல் இருக்காது எனப் படுகின்றது.

இந்த பாரிய வர்த்தக ஒப்பந்தம் 2019 முதல் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்து ஐரோப்பிய யூனியனின் அதிபர் டொனால்ட் டுஸ்க் கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் அமெரிக்காவுக்கே முதலிடம் என்ற தற்காப்புக் கோட்பாட்டினால் அந்நாட்டின் நண்பர் எதிரி என்று பாகுபாடு இன்றி அனைத்து தேசங்களது வர்த்தகமும் பாதிக்கப் பட்டு வருகின்றது. இதனால் எமது இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.' என்றார்.

சுமார் 28 ஐரோப்பிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக இரு நாட்டுப் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கவுள்ளது. அதாவது ஐரோப்பிய யூனியனும் பொருளாதார வளர்ச்சி 0.8% வீதமாகவும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 0.3% வீதமாகவும் நீண்ட காலத்துக்கு அதிகரிக்கவுள்ளது. ஏற்கனவே ஜப்பானும் ஐரோப்பிய யூனியனும் இணைந்து உலகின் 1/3 மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) இனைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்