உலகம்

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து கடந்த மாதம் அமெரிக்கா விலகியிருந்தது.

இந்நிலையில் மனித உரிமைகள் கழகம் ஐ.நா இன் மிகப் பெரிய தோல்வி என அமெரிக்காவுக்கான ஐ.நா தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். நிக்கி ஹலே இது குறித்து விரிவாகக் கூறுகையில் ஐ.நா மனித உரிமைகள் கழகம் தொடர்ந்து போலியான பாசாங்குகளைக் காட்டி வருவதை அமெரிக்கா தொடர்ந்தும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த மனித உரிமைகள் கமிசன் உலகின் மனித நேயமற்ற செயல்களைக் கண்டிப்பதற்குப் பதில் பாதுகாப்பதாகவும் அது அரசியலின் இருப்பிடமாக இருப்பதாகவும் நிக்கி ஹலே தெரிவித்தார். முக்கியமாக சீனா, வெனிசுலா, கியூபா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளில் நடந்து வரும் பல அத்துமீறல்களை ஐ.நா மனித உரிமைகள் கழகம் கண்டு கொள்வதில்லை என்றும் பதிலுக்கு பக்கச் சார்பற்ற முறையில் இஸ்ரேல் விவகாரத்தில் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உலகில் நடந்து வரும் முக்கிய விடயங்களில் ஐ.நா இன் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதோ அந்தளவும் அதன் முக்கிய பிரிவான மனித உரிமைகள் கழகமும் நியாயமான முறையில் வினைத்திறனுடன் செயலாற்றுவது அவசியம் என நிக்கி ஹலே சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும். இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.