உலகம்

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து கடந்த மாதம் அமெரிக்கா விலகியிருந்தது.

இந்நிலையில் மனித உரிமைகள் கழகம் ஐ.நா இன் மிகப் பெரிய தோல்வி என அமெரிக்காவுக்கான ஐ.நா தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். நிக்கி ஹலே இது குறித்து விரிவாகக் கூறுகையில் ஐ.நா மனித உரிமைகள் கழகம் தொடர்ந்து போலியான பாசாங்குகளைக் காட்டி வருவதை அமெரிக்கா தொடர்ந்தும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த மனித உரிமைகள் கமிசன் உலகின் மனித நேயமற்ற செயல்களைக் கண்டிப்பதற்குப் பதில் பாதுகாப்பதாகவும் அது அரசியலின் இருப்பிடமாக இருப்பதாகவும் நிக்கி ஹலே தெரிவித்தார். முக்கியமாக சீனா, வெனிசுலா, கியூபா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளில் நடந்து வரும் பல அத்துமீறல்களை ஐ.நா மனித உரிமைகள் கழகம் கண்டு கொள்வதில்லை என்றும் பதிலுக்கு பக்கச் சார்பற்ற முறையில் இஸ்ரேல் விவகாரத்தில் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உலகில் நடந்து வரும் முக்கிய விடயங்களில் ஐ.நா இன் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதோ அந்தளவும் அதன் முக்கிய பிரிவான மனித உரிமைகள் கழகமும் நியாயமான முறையில் வினைத்திறனுடன் செயலாற்றுவது அவசியம் என நிக்கி ஹலே சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.