உலகம்

அண்மையில் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்த போது அவரை அடுத்த முறை பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

பின்லாந்து சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கூட்டாகப் பேட்டியளிக்கையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டிய அவசியம் எதுவும் அதற்கில்லை என்று தொனிப்பட டிரம்ப் கூறிய கூற்று அமெரிக்காவில் கடும் விமரிசனத்துக்கு உள்ளானது.

ஆனால் தான் வார்த்தை தவறி சொல்லி விட்டதாகப் பின்னர் டிரம்ப் சமாளித்துக் கொண்டார். இந்நிலையில் தான் புதினைத் தான் அமெரிக்காவுக்கு அழைத்ததாக அண்மையில் டிரம்ப் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த டுவிட்டர் செய்தியில் ரஷ்யப் பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் ஒரு சில பிற்போக்கு வாதிகள் மற்றும் போலி செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு இது வெற்றியாக இருக்க வாய்ப்பில்லை தான் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதினுடனான 2 ஆவது கட்டப் பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்தை முறியடிப்பது, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் அணுவாயுத உற்பத்தியைக் குறைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து பேசவிருப்பதாகவும் டிரம்ப் டுவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை உலகின் நம்பர் ஒன் தேடு பொறியான கூகுளில் இமேஜ் பிரிவில் முட்டாள் என்று பொருள்படும் விதத்தில் idiot என்று தேடினால் அதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அநேக படங்கள் தோன்றுகின்றன. இதன் மூலம் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் கூகுள் தேடுதலுக்கு உபயோகிக்கும் அல்காரிதம் என்றும் கூறப்படுகின்றது. இந்த அல்காரிதம் அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் விரும்பும் பதில்கள் அடிப்படையில் அதன் தேடல் முடிவை ஒழுங்கு படுத்துகின்றது. இதனால் தான் இவ்வாறு சில சமயங்களில் அசாம்பாவிதம் ஏற்பட்டு விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும். இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.