உலகம்
Typography

தென்மேற்கு சிரியாவில் போர் நிகழும் பகுதியில் இருந்து வைட் ஹெல்மெட்ஸ் குழுவைச் சேர்ந்தா 422 பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியினூடாக ஜோர்டானுக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.

இச்செயலைப் பாராட்டியுள்ள பிரிட்டன் அரசு குறித்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மீள் குடியேற்றத்துக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளது..

இஸ்ரேலியப் படைகள் மூலம் மீட்கப் பட்ட இந்த வைட் ஹெல்மெட்ஸ் குழுவினர் சிரியாவின் போர் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களைக் காப்பாற்ற செயற்பட்டு வரும் தன்னார்வப் பணியாளர்கள் ஆவர். மீட்கப் பட்டவர்களைத் தவிர இன்னமும் பெரும்பாலான வைட் ஹெல்மெட்ஸ் பணியாளர்கள் சிரியாவில் உள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளின் பகுதிகளில் இருப்பதால் எஞ்சியவரகள் நிலை குறித்து அச்சம் நிலவுவதாக பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா இன் மதிப்பீடு முடிந்த பின் மீள் குடியேற்றம் செய்யப் படவுள்ள இந்த மீட்கப் பட்ட பணியாளர்கள் தற்போது ஜோர்டானின் தடை செய்யப் பட்ட பகுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்