உலகம்
Typography

கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள கிரீக்டவுன் பகுதியில் ஞாயிறு நள்ளிரவு உணவு விடுதி ஒன்றுக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப் பட்டதுடன் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொது மக்களை நோக்கித் திடீரென அப்பகுதியில் சராமரியாகச் சுட்டதால் பொது மக்கள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

விரைந்து வந்த போலிசார் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் பின்னர் போலிசார் அறிவித்துள்ளனர். சிறிய ரக கைத் துப்பாக்கியால் 14 பேர் சுடப் பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்மணி கொல்லப் பட்டதுடன் காயம் அடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். பல தடவை ரீலொட் செய்து 20 இற்கும் அதிகமான முறை குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு டொரொண்டோ போலிசார் தகவல் அளிக்கையில் இத்துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் எதற்காக இதில் ஈடுபட்டார் அவரின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடங்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். தற்போது டொரொண்டோ நகரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைக் குறைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 போலிசார்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். டொரொண்டோவில் கடந்த வருடத்தில் 26% வீதமாக இருந்த துப்பாக்கி வன்முறை இவ்வருடம் 53% வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்