உலகம்

ஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதித்து வரும் அல்சைமர் என்ற ஞாபகமறதி நோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குனரும் ஸ்தாபகரும் உலகின் நம்பர் 1 செல்வந்தருமான பில்கேட்ஸ் ரூ.35 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

நினைவுத் திறனையும் மூளையின் செயற்பாடுகளையும் பாதிக்கக் கூடிய அல்சைமர் நோய்க்கு உலகம் முழுதும் 5 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருவதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களை இந்த நோய் அதிகளவு தாக்குவது வளர்ச்சி அடைந்து வரும் உலகுக்கு பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் அல்சைமர் இனால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 7.5 கோடியாக உயரும் எனவும் இது 2050 இல் 13 கோடியே 15 இலட்சமாக உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அல்சைமர் நோய் தொடர்பான அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் போதுமான நிதியுதவி கிடைத்தால் இந்நோய்த் தடுப்பு ஆராய்ச்சியை விரைந்து மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.