உலகம்
Typography

அமெரிக்க இராணுவம் தொடர்பான ரகசியக் கோப்புக்களை விக்கிலீக்ஸ் வலைத் தளத்தில் வெளியிட்ட காரணத்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறி இலண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்து 6 ஆண்டுகளாக நிழல் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் விக்கிலீக்ஸ் இணையத் தள தாபகர் ஜூலியன் அசாஞ்சே.

45 வயதாகும் அசாஞ்சேயின் அரசியல் தஞ்சத்தை ரத்து செய்யத் தற்போது ஈக்குவடார் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக அமெரிக்க அரசால் கைதாவதைத் தவிர்ப்பதற்காக சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு அசாஞ்சே சென்றிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு எதிராகப் பாலியல் வழக்குத் தொடுக்கப் பட்டதால் கைது நடவடிக்கையைத் தவிர்க்க இலண்டன் சென்று அங்குள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்தார். 2012 முதல் இவ்வாறு அரசியல் தஞ்சத்தில் நிழல் வாழ்க்கை இவர் வாழ்ந்து வந்த காரணத்தால் அமெரிக்க அரசால் இவரைக் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இலண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகல் மாநாட்டில் ஈக்குவடார் அதிபர் லெனின் மோரெனோ கலந்து கொண்டதன் பின் பிரிட்டன் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தியிருந்தார். இதன் போது ஈக்குவடார் தூதரகத்தில் இருந்து அசாஞ்சேவை வெளியேற்றி பிரிட்டனிடம் ஒப்படைக்கப் போவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் அடுத்த வாரம் அல்லது இன்னும் சில தினங்களில் அசாஞ்சேயின் அரசியல் தஞ்சத்டை ரத்து செய்து அவர் தூதரகத்தை விட்டு வெளியேற்றப் படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஜாமின் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்கான் வழக்கின் அடிப்படையில் இவர் பிரிட்டன் அரசால் கைது செய்யப் படலாம். சிலவேளைகளில் இவ்வாறு கைதாகும் அசாஞ்சே இனைப் பிரிட்டன் அரசே அமெரிக்காவிடம் கையளிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்