உலகம்
Typography

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. 272 உறுப்பினர்களுக்கான போட்டியில் 3,459 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 06.00 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆரம்பம் முதலே இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அந்த கட்சி 114 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 57 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் சுயேட்சைகள் 55 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்றும் நிலையில், இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என தெரிகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்