உலகம்
Typography

சிரியாவின் ஸ்விடா மாகாணத்தில் புதன்கிழமை நிகழ்த்தப் பட்ட 4 தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் தெற்குப் பகுதியில் மாத்திரம் 38 பேர் பலியாகினர்.

ஸ்விடாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதலில் மொத்தம் 221 பேர் பலியாகினர். இதில் 127 பேர் அப்பாவி மக்கள் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ISIS தீவிரவாத அமைப்பு இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலின் வீரியம் அதிகம் என்பதால் பலியானவர்கள் தொகை அதிகரிக்கலாம் என்று அஞ்சப் படுகின்றது. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடவிருந்த மேலும் இரு தாக்குதல்தாரிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதேவேளை பீஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே விசாவுக்காக பொது மக்கள் காத்திருக்கக் கூடிய பகுதியில் 26 வயது மதிக்கத் தக்க சீன நபர் ஒருவர் சிறிய ரகக் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் அவருக்கு மட்டுமே சிறிது காயம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த குண்டினால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் முன்பே விரைந்து சென்ற போலிசார் அவரைக் கைது செய்து தமது கஸ்டடியில் எடுத்தனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணம் எதுவென இதுவரை தெரியவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் பலத்த வெடிகுண்டு ஓசை ஒன்றினைத் தான் கேட்டதாகவும் ஆனால் குறித்த இடத்தில் விரைவில் போலிசார் குவிக்கப் பட்டனர் என்றும் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS