உலகம்
Typography

மலேசியாவில் சட்ட விரோதமாகப் பணியாற்றி வரும் 6 இலட்சம் குடியேறிகளும் உடனடியாக சரணடைய அந்நாட்டு அரசின் குடியேற்றத் துறை காலகெடு விதித்துள்ளது.

அண்மைக் காலமாக மலேசியாவில் சட்ட விரோதமாகப் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை அநநாட்டு குடியேற்றத் துறை தீவிரப் படுத்தி வருகின்றது.

ஏற்கனவே ஜூலை 1 ஆம் திகதி முதல் நடத்தப் பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை 3000 சட்ட விரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31 முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இன்னும் தீவிரப் படுத்தப் படவுள்ளது. இந்த சட்ட விரோத தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தேவைப் பட்டால் அவர்களும் கைது செய்யப் படுவர் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சட்ட விரோத தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து சரணடைந்தால் அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவர் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை சரணடைய கெடு விதிக்கப் பட்டுள்ளது.

மலேசியாவில் பதிவு செய்யப் பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 20 இலட்சம் பேர் உள்ளனர். இதேவேளை அண்மையில் மெக்ஸிக்கோ அகதிகளின் குழந்தைகளைப் பிரிப்பது தொடர்பிலான கொள்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கை விட்டிருந்தார். இதை அடுத்து முதற் கட்டமாக சுமார் 1187 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்