உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான லோம்போக் தீவுப் பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் தாக்கியதில் 14 பேர் பலியாகியும் 162 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்தத் தீவு கிழக்கு பாலியிலிருந்து 40 Km தொலைவில் உலகளாவிய ரீதியில் பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் கண்கவர் பிரதேசமாக விளங்கி வருகின்றது.

இந்த நிலநடுக்கம் காரணமாக பல பெரிய கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதன் இடிபாடுகளில் சிக்கி சிலர் காயமடைந்தும் உள்ளனர். நிலநடுக்கத்தின் வீரியம் அதிகமாக இருந்ததனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்துடன் தெருக்களிலும் மைதானத்திலும் குவிந்தனர். சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப் பட்டது. நிலநடுக்கப் பகுதிகளில் இருந்து பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் படுவதில் கவனம் செலுத்தப் படுவதாக இந்தோனேசிய பேரிட முகாமைத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இரு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக தீயில் சிக்கிப் பலியாகி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்