உலகம்
Typography

அண்மையில் பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.

இதை அடுத்து அங்கு முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

மொத்தம் 272 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவைப் படுகின்றன. ஏற்கனவே வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நிகழ்வதாக பல கட்சியினர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 116 தொகுதிகளிலும் நவாஸ் ஷெரீஃபின் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் பெற்றுள்ளன. இது தவிர முத்தஹிதா மஜ்லிஸ் இ அம்ல் கட்சி 13 இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் இம்ரான் கானின் கட்சி மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார். இதேவேளை ஊழல் வழக்கில் அண்மையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் நெஞ்சுவலி காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப் படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS