உலகம்
Typography

சனிக்கிழமை $1 அமெரிக்க டாலருக்கு 98 000 ரியாலாக இருந்த ஈரானின் நாணயப் பெறுமதி ஞாயிற்றுக்கிழமை டாலருக்கு 112 000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச நாணய மதிப்பில் ஈரானுக்கு வரலாற்றுச் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் டாலருக்கு சராசரியாக 50 000 ரியால் என்ற கணக்கில் இருந்த இதன் நாணய மதிப்பு 4 மாதங்களுக்குள் இரண்டு மடங்காகி உள்ளது.

ஈரானின் பணப்பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணமாக அங்கு அதிகரித்து வரும் பொருளாதாரச் சரிவு மற்றும் அண்மையில் அமெரிக்கா அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் பின் உடனடியாக அதிகரித்த அமெரிக்க பொருளாதாரத் தடைகள் என்பன கூறப்படுகின்றன.
ஈரானின் டாலருக்கு நிகரான பணப் பெறுமதி வீழ்ச்சியால் ஜனவரியில் டாலருக்கு 35 186 ஆக இருந்த அதன் நாணய மாற்று விகிதம் தற்போது டாலருக்கு 44 070 ஆகக் காணப்படுகின்றது.

ஈரானின் நிலமை இப்படி இருக்க ஆகஸ்ட் 6 ஆம் திகதியும் நவம்பர் 4 ஆம் திகதியும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழு வீச்சில் இன்னமும் அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் ஈரானுடனான பல வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகங்களும் தடைப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS