உலகம்
Typography

மெக்ஸிக்கோவின் வடக்கு டுராங்கோ மாகாணத்திலுள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகளுடனும் 4 விமான பணியாளர்களுடனும் மெக்ஸிக்கோ சிட்டியை நோக்கிப் புறப்பட்ட ஏர்மெக்ஸிக்கோ விமானம் செவ்வாய்க்கிழமை மாலை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு சில விநாடிகளுக்குள் மோசமான காலநிலை காரணமாக் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.

இதையடுத்து விரைந்து செயற்பட்ட விமான ஒட்டுனர்கள் குறித்த விமானத்தை அருகே உள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 85 பேர் காயம் அடைந்துள்ள்னர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மெக்ஸிக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விமானம் டேக் ஆஃப் ஆகி சில நொடிகளில் புயல் காற்று காரணமாக அதன் ஓட்டத்தில் ஏற்பட்ட அதிர்வே விபத்துக்குக் காரணம் என டுராங்கோ கவர்னர் ஜோஸ் றொசாஸ் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் அவசர சேவைப் பிரிவினரும், இராணுவமும், செஞ்சிலுவைச் சங்கமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது இருக்கப் பிரார்த்தனை செய்வதாக மெக்ஸிக்கோ அதிபர் என்ரிக்குவே பெனா நியேட்டோ தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS