உலகம்
Typography

இந்தோனேசியாவில் ரியாஞ்சனி மலைப் பகுதி அருகே 6.4 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து வலிமையான தொடர் அதிர்வுகளும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டிருந்தன.

இதனால் இம்மலைப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு அருகே இருந்த எரிமலைப் பகுதியில் நூற்றுக் கணக்கான மலையேறுபவர்கள் தனித்து விடப் பட காரணமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நிலச்சரிவுகளால் பாதிக்கப் படாத வேறு மார்க்கமாக கிட்டத்தட்ட 500 இற்கும் அதிகமான மலையேறுபவர்கள் (Hikers) பாதுகாப்பாக மீட்புப் படையினரால் வெளியேற்றப் பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழ்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த சுமார் 560 டிரேக்கர்கள் இந்த மலைப் பகுதியில் தவிக்க நேரிட்டதாகக் கணிப்பிடப் பட்டிருந்தது. தற்போது இதில் 543 பேர் மீட்கப் பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமை ஏஜன்ஸி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெறும் 6 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர் என்றும் குறித்த பேச்சாளர் AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். மேலும் மீட்கப் பட்ட மலையேறுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இவர் உறுதி படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுப் பகுதியில் தாக்கிய நிலநடுக்கத்தில் ஒரு சுகாதார நிலையம் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தும் 16 பேர் வரை பலியாகியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்