உலகம்

சிம்பாப்வேயில் திங்கட்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிபர் எமர்சன் நங்கக்வா வெற்றியடைந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது.

37 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்தி வந்த ராபர்ட் முகாபே கிளர்ச்சி மூலம் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதன்முறையாக நடைபெற்ற இப்பொதுத் தேர்தல் ஜனநாயக மாற்றத்தை அங்கு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி எதிர்க் கட்சிகள் தேர்தல் முடிவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. முக்கியமாக இந்த முறைகேடுகள் குறித்த உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக சிம்பாப்வே எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசா அறிவித்துள்ளார். தேர்தல் முடிவின் படி 50% வீதத்துக்கும் சற்று அதிகமாக அதாவது 50.8% வாக்குகளை முனங்காக்வா பெற்றிருந்த காரணத்தால் எதிர்க் கட்சியினரால் 2 ஆவது முறை தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நங்கக்வா இன் வெற்றியை தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது.

ஆனாலும் தேர்தல் முறைகேடுகளை வலியுறுத்தி எதிர்க் கட்சியினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதை அடுத்து போராட்டக் காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். வன்முறையை மேலும் கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் அளவுக்கு அதிகமாக சிம்பாப்வே இராணுவத்தை அரசு பிரயோகித்ததாக ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த முயன்ற எதிர்க் கட்சியினரை சிம்பாப்வே அதிரடிப் படை தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி குடிமக்களுக்கு கடிதம் ஒன்றினை வெளியீட்டுள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் போலிஸ் விசாரணையின் போது வேண்டுமென்றே கருப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டதற்கு நீதி வேண்டி மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின மக்களால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.

சமீப நாட்களாக இந்தியாவும், சீனாவும் எல்லயில் படைகளைக் குவித்து வருவதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு இராணுவத்தினருக்குப் பணித்திருப்பதாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.