உலகம்
Typography

சனிக்கிழமை மாலை 2 ஆம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட சிறிய ரக விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச் நகருக்கு அருகே உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் மோதி விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 20 பேரும் பலியானதாக சுவிட்சர்லாந்து காவல் துறை தெரிவித்துள்ளது.

1939 ஆம் ஆண்டு ஜேர்மனியில் தயாரிக்கப் பட்ட ஜேயு52 என்ற இந்த பழைய விமானம் டிசினோவில் இருந்து டியுபெண்டார்ப் என்ற இராணுவ விமானத் தளத்துக்கு புறப்பட்ட போதே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் பலியானவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்றனர். இந்த விமானம் திடீரென ஆல்ப்ஸ் மலையின் பகுதியான பிஸ் செக்னாஸ் என்ற மலை மீது மோதி வெடித்துச் சிதறியதற்கு என்ன காரணம் என இதுவரை கண்டறியப் படவில்லை. இந்த விபத்தை அடுத்து குறித்த விமானத்தைத் தயாரித்த ஜெ யு ஏரின் விமான சேவைகள் அனைத்தும் கால வரையறை இன்றி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் 42 தொடக்கம் 84 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். கடல் மட்டத்தில் இருந்து 8333 அடி உயரத்தில் இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்