உலகம்

அண்மையில் அதிபர் ஒபாமா பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப் பட்ட ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப் பட்சமாக அமெரிக்கா வெளியேறுவதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து படிப்படியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப் பட்டன. நவம்பரில் அதிகாரப் பூர்வமாக இன்னும் அதிகரிக்கப் படும் பொருளாதாரத் தடைகல் இதை விட கடும் அழுத்தத்தை ஈரானுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 'ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது. எனக்கு உலக அமைதியே முக்கியம். வேறு எதுவும் கிடையாது.' எனப்பட்டுள்ளது.

2015 மே மாதம் வியன்னாவில் ஈரான் தனது அணுசக்தித் திட்டங்கள் அணுவாயுதம் தயாரிக்கவல்ல என உறுதி செய்யவும் பதிலுக்கு அதன் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்திக் கொள்வதற்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே முன்னால் அதிபர் ஒபாமா தலைமையில் அணு ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்கப் பாதுகாப்பை உறுதிப் படுத்தவில்லை என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மே 8 ஆம் திகதி இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிற நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்நிலையில் புதிய பொருளாதாரத் தடைகளின் படி அமெரிக்காவில் இருந்து கார்களை இறக்குமதி செய்யவும் தரை விரிப்புக்களை ஏற்றுமதி செய்யவும் அமெரிக்க டாலரை ஈரான் பயன்படுத்தவும் தடை அதிகாரப் பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :