உலகம்
Typography

அணுவாயுதங்களைத் தாங்கியவாறு ஒலியை விட 5 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஸ்டார்ரி ஸ்கை 2 என்ற அதிநவீன ஹைப்பர் சோனிக் விமானத்தை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

தரையில் இருந்து புறப்படும் ஏவுகணைகளத் துல்லியமாக ஊடுருவித் தாக்கக் கூடிய இந்த ஹைப்பர் சோனிக் விமானத்தை வடமேற்கு சீனாவின் மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு அடையாளப் படுத்தப் படாத இடத்தில் சீனா பரிசோதித்துள்ளது.

இத்தகவலை விண்வெளி மற்றும் வான் பௌதிகவியலுக்கான சீன அகெடமி உறுதிப் படுத்தியுள்ளது. ஒரு மணித்தியாலத்துக்கு 7 344 Km வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஸ்டார்ரி ஸ்கை 2 விமானம் அது தானே உற்பத்தி செய்யும் ஷாக் வேவ்ஸ் (Shock Waves) மூலமாக உந்து விசையை ஏற்படுத்திப் பயணிக்க வல்லது என்பதால் இது சீனாவின் முதல் வேவ் ரைடர் ரக விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் பரிசோதிக்கப் பட்ட போது பூமியின் தரையில் இருந்து 30 Km உயரத்தில் பறந்துள்ளது.

ஸ்டார்ரி ஸ்கை 2 விமானத்தின் பரிசோதனை மூலம் சீனா அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையான விமானத் தொழிநுட்பத்தைப் பெற்றுள்ளதாக சீன அரச ஊடகத் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS