பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை) பதவியேற்றார்.
இஸ்லாமபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மமூத் ஹூசைன் முன்னிலையில் இம்ரான் கான் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கடந்த யூலை 25ஆம் திகதி இடம்பெற்ற பாகிஸ்தானின் 15வது பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றியதை தொடர்ந்தே இம்ரான் கான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கானிற்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நிலவி வந்த நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 176 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இம்ரான் கானின் பதவியேற்பு நிகழ்வில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டுள்ளார்.