உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரானமைக்கேல் கோவன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்தது தொடர்பாக கோவன் இந்த சாட்சியம் அளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோவன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனிடையே, மேற்கு வர்ஜினியாவில் முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஒன்றில் கலந்து கொள்ள வந்த டிரம்ப், கோவன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை தவிர்த்துவிட்டார்.
படத்தின் காப்புரிமை Getty Images

இதேபோல், இந்த குற்றச்சாட்டு குறித்து வெள்ளை மாளிகையும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் டீ கோவன் , கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்ட்ரோமி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானபின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலானியா டிரம்ப்புக்கு அவரது மகன் பேரான் 2006இல் பிறந்த சில நாட்களில் டிரம்ப்புடன் தமக்குப் பாலியல் உறவு இருப்பதாக 2011இல் ஒரு பேட்டியில் டேனியல்ஸ் கூறியிருந்தார். அதை டிரம்ப் உறுதியாக மறுப்பதாக வழக்கறிஞர் மைக்கேல் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

அதிபர் தேர்தல் நடந்த 2016இல் டிரம்ப் உடனான உறவு குறித்து பேச டேனியல்ஸ் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டதால் அவருக்கு பணம் வழங்கப்பட்டது என்ற செய்தி கடந்த ஜனவரி மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டிரம்ப் உடன் டேனியல்ஸ்க்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று அந்த நடிகையின் செய்தித்தொடர்பாளர் ஜனவரி 30 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பிபிசி தமிழ் செய்திகள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்