உலகம்
Typography

எமது பூட்டான் தேசத்துக்கு பௌத்த மதம் இந்தியாவின் மிகப் பெரிய பரிசுகளில் ஒன்று என்றும் நிச்சயம் இந்தியாவானது ஞானம் பெற்ற நிலம் என்றும் தேசத்தின் தாய் என அழைக்கப் படும் பூட்டான் அரசியன ஆஷி டோர்ஜி வங்மோ வங்சுக் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையேயான ராஜதந்திர உறவின் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஒழுங்கு செய்யப் பட்ட Mountain Echoes Literary Festival என்ற வைபவத்தின் போதே பூட்டான் அரசியார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பூட்டானுக்கு பௌத்தம் வருகை தந்த போது மிகவும் சிறப்பான பௌத்த மதத் துறவிகள் அதிலும் முக்கியமாக குரு பத்மசம்பவா ஆகியோர் பூட்டானுக்கு வருகை அளித்தனர். பகவான் புத்தர் மற்றும் குரு பத்மசம்பவா ஆகியோரின் உபதேசங்கள் பூட்டானின் ஒவ்வொரு குடிமகனையும் பாதித்து நல்வழிப் படுத்தி வருகின்றன என்றும் பூட்டான் அரசியார் தெரிவித்தார்.

பௌத்த மதம் தொடர்பான இந்தியாவுடனான ஆன்மிகத் தொடர்பு காரணமாகத் தான் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையேயான நல்லுறவு இன்னமும் வலுப்பெற்று வருவதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் பூட்டானுக்குமான நல்லுறவு பூட்டானின் 3 ஆவது அரசரும் இந்தியாவின் ஜவஹார்லால் நேருவும் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1961 ஆம் ஆண்டு இக்காலப் பகுதியில் தான் இந்தியாவின் பெரும் நிதியுதவி காரணமாக பூட்டானில் தார் பாதைகள், பள்ளிகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பன அமைக்கப் பட்டும் இருந்தன.

மேலும் இந்தியாவின் அனுசரனையுடன் பூட்டான் 1971 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா சபை உறுப்பு நாடாகவும் மாறியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS