உலகம்
Typography

வெள்ளிக்கிழமை பெரு மற்றும் பிரேசில் நாட்டு எல்லைப் பகுதியை மையமாகக் கொண்டு 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

பெருவின் கிழக்கே பிரேசில் எல்லைப் பகுதியில் இருந்து 609 Km தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

இதன் அதிர்வுகள் பெருவின் கிழக்குப் பகுதிகளிலும் பிரேசிலின் சில பகுதிகளிலும் பலமாக உணரப் பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என அந்நாட்டின் தேசிய பேரிடர் முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது. மறுபுறம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் வெள்ளிக்கிழமை மாலை 5.5 ரிக்டர் மற்றும் 5.7 ரிக்டர் அளவுகோல்களில் மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இதன் போது சுனாமி அலைகள் ஏற்பட்டதாகவோ அல்லது உயிர்ச் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS