உலகம்
Typography

நேபாள தலைநகர் காத்மண்டுவில் 13 வயதுச் சிறுமி கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப் பட்டமைக்கு நீதி கோரி ஆயிரக் கணக்கானவர்கல் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது காவற் துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் ஒருவர் கொல்லப் பட்டும் 12 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

அரசின் இந்த முறைகேடான செயலினால் பொதுமக்கள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஜூலை 13 இல் காத்மண்டுவில் 13 வயதுச் சிறுமி ஒருவர் காணாமற் போயிருந்தார். பின்னதாக இச்சிறுமியின் சடலம் கரும்புத் தோட்டத்தில் மீட்கப் பட்டது. இச்சிறுமி கொலை செய்யப் பட முன்னர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகின்றது. இச்செயலுக்கு நீதி கோரியே ஆயிரக் கணக்கான மக்கள் தலைநகர் காத்மண்டுவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டிருப்பதானது அரச சிறுமியைக் கொலை செய்த குற்றவாளியை பாதுகாக்க முனைகின்றது என போராட்டக் காரர்கள் மேலும் சினமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காவல் துறை அதிகாரி கிருஷ்ணா ராஜ் அஜ்ஹா தகவல் அளிக்கையில், போராட்டத்தைக் கட்டுப் படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது என்றுள்ளார். இதில் 17 வயதுடைய இளைஞர் ஹானி ஹவுனா என்பவர் இறந்து விட்டதாகவும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்தினர் தமது குழந்தைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அஞ்சி தவறி விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேபாளைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலர் ஹீமா பிஸ்டா கூறுகையில் அண்மைக் காலமாக நேபாள அரசு பெண்களுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் எதிரான குற்றச்செயல்களைத் தடுக்கவும் வழக்குகளை விசாரிக்கவும் தவறி வருவதாகவும் மேலும் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அரசின் இச்செயல் சமூக ஊடகங்களிலும் மோசமாக விமரிசிக்கப் பட்டு வருகின்றது. நேபாளத்தில் 2017 ஆமாண்டு மட்டும் 1480 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் இது 2016 ஆமாண்டை விட இரு மடங்கு அதிகம் எனவும் காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்