உலகம்
Typography

ஆப்கானிஸ்தானின் கிழக்கே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள நங்கர்ஹார் என்ற மாகாணத்தில் சனிக்கிழமை அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ISIS தீவிரவாதிகள் குழுவின் தலைவனான அபு சாட் எர்ஹபி என்பவனும் ஏனைய 10 உறுப்பினர்களும் கொல்லப் பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அபு சாட் எர்ஹாபி என்பவன் கடந்த சில வருடங்களில் கொல்லப் பட்ட 4 ஆவது ஆப்கான் ISIS தீவிரவாத இயக்கத் தலைவன் ஆவான். ஆப்கானில் அண்மைக் காலமாகப் பல மோசமான தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி வந்த இஸ்லாமிய தேசப் போராளிகள் தலைவனாக 2014 ஆமாண்டு முதல் ஆக்டிவாக அபு சாட் எர்ஹாபி இயங்கி வந்துள்ளான். இத்தாக்குதல் தொடர்பில் காபூல் தேசிய பாதுகாப்புச் சபையின் இயக்குனர் தகவல் அளிக்கையில் எர்ஹாபியைப் பலி வாங்கிய விமானத் தாக்குதல் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் கூட்டு வான் வழி மற்றும் தரை வழி ஆப்பரேஷனின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.

ஆயினும் எர்ஹாபியின் மரணத்தை அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் உறுதி செய்யவில்லை. 2017 ஜூலை மாதம் குனார் மாகாணத்தில் ISIS தலைமையகத்தில் அமெரிக்க விமானப் படைகளின் தாக்குதலில் தான் ISIS இன் முன்னால் தலைவனான அபு சாயேட் என்பவனும் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எர்ஹாபியின் மரணம் தொடர்பில் ISIS தீவிரவாதிகளும் இதுவரை தகவல் அளிக்கவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS