உலகம்
Typography

கூகுள், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளி திரித்து வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

அதிலும் விரிவாக அமெரிக்க எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக் காட்சி நிகழ்வுகளுக்கு மட்டுமே கூகுள் முன்னுரிமை அளிப்பதாகவும் ஆனால் டிரம்ப் குறித்த சாதகமான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் டிரம்ப் சாடியுள்ளார்.

மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்கே குறித்த இந்த சமூக வலைத் தளங்கள் முயன்று வருகின்றன என்றும் இவை செல்லும் பாதை தவறானது என்றும் தெரிவித்த டிரம்ப் இவ்வாறு தொடர்ந்து செயற்பட இவர்கள் நினைத்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். அதிபர் டிரம்ப் இனது செய்திகள் இருட்டடிப்பு அல்லது திரித்து வெளியிடப் படுவது உண்மை தானா என்று கண்டறியத் தற்போது வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கூகுள் தேடு தளமோ தாம் அரசியல் சார்பற்று செயற்படும் விதத்தி தான் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் எந்தவொரு அரசியல் கட்சியின் கொள்கைக்கும் ஆதரவு கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் டிரம்பின் கருத்துப் படி கூகுள் பலரைத் தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வதாகவும் முக்கியமாக டிரம்ப் குறித்த தேடல்களில் ஒருதலைப் பட்சமான முடிவுகள் அதிகம வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் மீது எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப் படும் என டிரம்ப் தரப்பில் இதுவரை தெரிவிக்கப் படவில்லை. இதேவேளை குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் ஜோன் மெக்கைன் மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக முதலில் வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட்ட அமெரிக்க தேசியக் கொடியை முழுக் கம்பத்தில் ஏற்றி விட்டு பின்னர் மீண்டும் இறக்கிப் பறக்க விட்டு அதிபர் டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்