உலகம்
Typography

சமீபத்தில் ஈரானுடனான சர்வதேசத்தின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அரசு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் கீழ் தன்னிச்சையாக வெளியேறி இருந்தது.

2015 ஆமாண்டு மேற்கொள்ளப் பட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதொல்லா அலி கமெனெய் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் ஈரானுடன் நிபந்தனையற்ற எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ஈரான் உடன்படக் கூடாது எனவும் கமெனெய் கூறியுள்ளார். மேலும் ஈரானுக்கு மேலும் நண்மை பயக்காது என்ற நிலமை ஏற்படும் பட்சத்தில் ஈரான் அரசு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் எனவும் புதன்கிழமை அயதொல்லா அலி கமெனெய் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரானுடனான இந்த 2015 ஆமாண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் சர்வதேசம் ஈரானுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடப்பாடும் அவைக்கு உள்ளன என்றும் கமெனெய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS