உலகம்
Typography

நவம்பர் 1998 இல் விண்ணில் செலுத்தப் பட்டு பூமியின் தாழ் ஒழுக்கில் 92 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை புவியை சுற்றி வருமாறு பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையங்களால் நிறுவப் பட்ட ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இதனைப் பழுது பார்க்கும் பணியில் அதில் தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

2011 ஆமாண்டு கட்டுமானப் பணி நிறைவுற்ற ISS செய்மதி தான் இதுவரை விண்ணில் செலுத்தப் பட்ட செய்மதிகளில் அதிகம் செலவிட்டு பல நாடுகளின் கூட்டு முயற்சியால் இயக்கப் பட்டு வரும் மிகப் பெரிய செயற்கைக் கோள் ஆகும். இதற்குள் இருந்து இதை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்போதும் 2 பேர் 2000 ஆமாண்டு முதல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மிகச்சிறிய விண்கல் போன்ற ஒரு பொருள் உரசியதால் ISS இல் ஆக்‌சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இதனால் அங்கு தற்போது பணியாற்றி வரும் 6 விண்வெளி வீரர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது ISS இல் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணியில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் ஈடுபட்டு வருவதாக ஹுஸ்டன், டெக்சாஸ் மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள ISS கட்டுப்பாட்டு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS