உலகம்
Typography

ரஷ்யாவின் சோச்சி நகரில் தரையிறங்கிய விமானம் ஒன்று ஓடுதளத்துக்கு வெளியே சென்று தீப்பற்றியதில் 18 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

உடேர் ரக யுடி579 என்ற இந்த போயிங் 737-800 ரக விமானம் 164 பயணிகளுடனும் 6 விமான ஊழியர்களுடனும் ஏற்றியவாறு மாஸ்கோவில் இருந்து சோச்சி நகருக்கு புறப்பட்டது.

இதன் போது அது விமான நிலைய சுவரில் மோதி ஆற்றங்கரையில் விழுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதில் சிலருக்குத் தீக்காயமும் இன்னும் சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. மீட்பு நடவடிக்கையின் போது விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. விமானம் இறங்கும் சமயத்தில் கனமழை பெய்ததாகவும் இதனால் அது கட்டுப்பாட்டை மீறி ஓடுதளத்தை விட்டு வெளியேறியதுடன் அதன் ஒரு இறகுப் பகுதியும் சேதமடைந்ததில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

காயம் அடைந்தர்கள் மீட்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றனர். இதில் 3 பேர் குழந்தைகள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. கடந்த மாதம் இதே விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று வடமேற்கு சைபீரியாவில் விழுந்து வெடித்துச் சிதறியதில் 18 பேர் பலியாகி இருந்தனர். பெப்ரவரியில் ரஷ்ய ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கி இருந்தது. இவ்வாறு ரஷ்யாவில் சமீப காலமாக அதிகரித்து வரும் விமான விபத்துக்கள் தேசிய வான் வழிப் பாதுகாப்புப் பற்றிய கவலைகளை ரஷ்ய அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

2015 ஆமாண்டுக்குப் பின் ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இவ்விபத்து கருதப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்